26 C
Jaffna
November 29, 2023
இலங்கை

பிரான்ஸ் செல்ல முயன்ற கிளிநொச்சி குடும்பஸ்தர் பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்பு

பிரான்ஸ்க்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி
வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்று அங்கிருந்து பெலராஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலராஸ் போலந்து எல்லையை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலராஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7 ஆம் திகதி சனிக் கிழமை பெலராஸ் எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில் உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுவே அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!