யாழிலிருந்து முல்லை நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்

Date:

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்று (14) மாலை 5.30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வந்த மூவர் தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி சென்றுள்ளனர்.

மதுபோதையில் பயணித்தவர்கள், பேருந்து விதிமுறைகளை மீறி செலுத்தப்படுவதாக சாரதியுடன் முரண்பட்டு, தலைக்கவசத்தை பேருந்தின் மீது வீசியெறிந்துள்ளனர்.

இச் சம்பவத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டது.

பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்