26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
விளையாட்டு

ODI WC 2023: இலங்கையை வென்றது பாகிஸ்தான்

நடப்பு உலகக் கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் அணி. முகமது ரிஸ்வான் பொறுப்புடன் விளையாடி பாகிஸ்தானை வெற்றி பெற செய்தார்.

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நாணச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது இலங்கை. குசல் மெண்டிஸ், 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார். சதீர சமரவிக்ரம, 99 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்க, 51 ரன்கள் எடுத்தார். 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது.

இமாம்-உல்-ஹக் மற்றும் பாபர் அஸம் என இருவரும் விரைந்து ஆட்டமிழந்தனர். 37 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. இக்கட்டான அந்த நேரத்தில் அப்துல்லா ஷஃபீக் மற்றும் முகமது ரிஸ்வான் இணைந்து 176 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்துல்லா ஷஃபீக், 103 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் வந்த ஷகீல் உடன் இணைந்து 95 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரிஸ்வான். ஷகீல், 31 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து பேட் செய்ய வந்த இஃப்திகார் உடன் 37 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரிஸ்வான். 121 பந்துகளில் 131 ரன்கள் எடுத்த ரிஸ்வான், இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

Leave a Comment