25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

அதிகாலையில் அதிர்ச்சி வைத்தியமளித்த ஹமாஸ்: 22 இஸ்ரேலியர்கள் பலி; பல இராணுவத்தினர் சிறைப்பிடிப்பு!

இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ஹமாஸின் இராணுவப் பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் அறிவிததுள்ளார்.

“ஒபரேஷன் அல்-அக்ஸா புயல்” என்ற இந்த நடவடிக்கை சனிக்கிழமை அதிகாலை தொடங்கியது. இதன்போது, இஸ்ரேல் மீது 5,000 ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாக முகமது டெய்ஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

காசாவில் இருந்து பாலஸ்தீன போராளிகள் ஊடுருவியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை எதிர்கொள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் அவர் வலியுறுத்தினார்.

பல இஸ்ரேலிய படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பிய முகமது டெய்ஃப் பொதுவில் தோன்றுவதில்லை. அவரது செய்தி ஒரு பதிவில் வழங்கப்பட்டது.

சனிக்கிழமையன்று காசா பகுதியில் பாலஸ்தீனிய போராளிகள் தெற்கு இஸ்ரேலிற்குள் ஊடுருவினர். இதையடுத்து, அப்பகுதியில் வசிப்பவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு இஸ்ரேல் அறிவித்தது.

ஹமாஸின் இந்த தாக்குதல் இஸ்ரேலை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

“இஸ்ரேல் எல்லைக்குள் ஏராளமான பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்” என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் இஸ்ரேலிய எல்லை நகரமான ஸ்டெரோட்டில் சீருடை அணிந்த துப்பாக்கி ஏந்தியவர்களைக் காட்டியது. வீடியோக்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது, அதன் நம்பகத்தன்மையை உடனடியாக சரிபார்க்க முடியவில்லை.

காசா பகுதியில் உள்ள போராளிகள் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவினர். இதையடுத்து, இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்தன.

இந்த தாக்குதலுடன், மீண்டுமொரு இஸ்ரேல்- பாலஸ்தீன போருக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையில் பல இஸ்ரேல் இராணுவத்தினரை உயிருடன் பிடித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகள் ஆரம்பித்துள்ள தாக்குதலில் 22 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளது இதுவரை உறுதியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

Leave a Comment