ஆசிய சம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு பொருத்தமான காணியை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குண்டசாலை பிரதேச செயலாளர் எஸ்.டி.நாகஹத்தனைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குண்டசாலை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குண்டசாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (06) இடம்பெற்ற போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தருஷி கருணாரத்ன மிகவும் திறமையான பாடசாலை மாணவி எனவும், நிச்சயமாக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லக்கூடியவர் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 21 வருடங்களுக்குப் பின்னர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீற்றர் பெண்களுக்கான போட்டியில் இளம் வீராங்கனையாகப் போட்டியிட்டு இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்றார் என்றும் அறிவிக்கப்பட்டது.




