பம்பலப்பிட்டி வீடமைப்புத் தொகுதியிலுள்ள வீடொன்றின் உரிமை தொடர்பான சர்ச்சையின் உண்மைகளை விளக்குவதற்காக கலபொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேரை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (02) உத்தரவு பிறப்பித்துள்ளார். வுள்ளார்.
தனிப்பட்ட முறைப்பாட்டைக் கருத்தில் கொண்ட மாஜிஸ்திரேட், பிரதிவாதிகளான கலபொட அத்தே ஞானசார தேரர், தயாசீல தேரர் மற்றும் சம்பந்தப்பட்ட வீட்டுத் தொகுதியின் குழுத் தலைவர் சில்வெஸ்டர் ஆகியோரையே நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிட்டார்..
சட்டத்தரணி சந்தியா தல்துவா நீதிமன்றில் இந்த தனிப்பட்ட முறைப்பாட்டை தாக்கல் செய்ததையடுத்து, அவர் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பம்பலப்பிட்டியில் வசிக்கும் இனோகா சந்திம சேனாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அமெரிக்காவில் வசிக்கும் அவரது அத்தையால் சட்டப்பூர்வமாக தனக்கு ஒதுக்கப்பட்ட இந்த சொத்துக்குள் நுழைய பிரதிவாதிகள் அனுமதிக்கவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.