கெட்ட வார்த்தை சொன்ன 3 வயது குழந்தையின் வாயை எரித்த தாய்

Date:

மூன்று வயதுக் குழந்தையின் வாயில் தீக்குச்சியால் எரித்த மூன்று வயது குழந்தையின் தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தியுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குழந்தையின் மேல் உதட்டில் தீக்காயங்களின் அடையாளமும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெட்ட வார்த்தைகளை கூறியதால், இனிமேல் அந்த வார்தையை பயன்படுத்தக்கூடாது என பயமுறுத்துவதற்காக, தீக்குச்சியைக் கொளுத்தி, வாயில் நெருக்கமாக வைத்திருந்ததாக சந்தேகநபர் கூறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது குழந்தையின் மேல் உதடு எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் 118 அவசர அழைப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் திவுலப்பிட்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குழந்தை தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் குழந்தையின் தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்