27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
விளையாட்டு

ரி20 போட்டிகளின் பல சாதனைகளை தகர்த்த நேபாளம்!

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது நேபாளம். இந்தப் போட்டியில் அதிவேக அரைசதம் மற்றும் சதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

19 வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் கிரிக்கெட்டில் நேபாளம் மற்றும் மங்கோலியா விளையாடின. முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம், 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. மங்கோலியா 41 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

நேபாள அணி வீரர்கள் குஷல் மல்லா, 50 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார். அவர் 34 பந்துகளில் சதமடித்தார். ரி 20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதி விரைவு சதம் இது. இதற்கு முன் டேவிட் மில்லர், ரோஹித் சர்மா மற்றும் செக் குடியரசின் சுதேஷ் விக்ரமசேகர ஆகியோர் 35 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.

தீபேந்திர சிங், 10 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் ரி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் பதிவு செய்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 8 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 9 பந்துகளில் அவர் அரைசதத்தை எட்டினார்.

இதன் மூலம் 2007இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் பதிவு செய்த யுவராஜ் சிங்கின் சாதனையை அவர் தகர்த்துள்ளார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2019இல் அயர்லாந்து அணிக்கு எதிராக குவித்த 278 ரன்கள் தான் ஒரு அணி ஒரே இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. பின்னர், துருக்கிக்கு எதிராக செக் குடியரசும் 278 ரன்களை குவித்தது. அதையும் இந்தப் போட்டியில் நேபாளம் தகர்த்துள்ளது. ஆண்கள் ரி20 போட்டிகளில் முதல்முறையாக 300 ஓட்டங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

மங்கோலியாவுக்கு எதிராக 273 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் வெற்றி பெற்றது. ரி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சாதனையும் நேபாளம் வசமே வந்துள்ளது. 2019 இல் துருக்கிக்கு எதிராக செக் குடியரசு 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இதற்கு முந்தைய மிகப்பெரிய வெற்றி வித்தியாசமாகும்.

26 சிக்ஸர்களுடன் 314 ரன்களை நேபாளம் எடுத்துள்ளது. ரி 20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிக சிக்சர் சாதனை இது.  2019 இல் டேராடூனில் அயர்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தாளும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகளும் 22 சிக்சர்கள் எடுத்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

Leave a Comment