தியாகி திலீபனின் நினைவை இன்று (26) உலகமெங்குமுள்ள தமிழ் மக்கள் அனுட்டித்து வருகிறார்கள்.
இராணுவ, அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் தாயகத்தில் இம்முறையும் தியாகியை தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நினைவு நிகழ்வுகள் நடந்து வருகிறது.
இன்று நல்லூரில் நடக்கும் நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞன் ஒருவர், கையில் திலீபனின் படத்தை பச்சை குத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.




