இலங்கை எரிபொருள் சந்தையில் நுழையும் அமெரிக்க நிறுவனம்!

Date:

அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks நிறுவனம், Shell வர்த்தக நாமத்தின் கீழ் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது.

முதற்கட்டமாக Shell வர்த்தக நாமத்தின் கீழ் 150 எரிபொருள் நிலையங்கள் செயற்படும்.

நிறுவனம் மேலும் 50 எரிபொருள் நிலையங்களைத் தாங்களாகவே பின்னர் திறக்கும்.

சிலோன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன், லங்கா இந்தியன் ஓயில் கோர்ப்பரேஷன் மற்றும் சினோபெக் ஆகியவற்றைத் தொடர்ந்து நாட்டின் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனமாக, ஷெல் பிஎல்சியின் கீழ் இயங்கும் ஆர்எம் பார்க்ஸ்  மாறும்.

Shell PLC உடன் இணைந்து RM Parks இலங்கை பெற்றோலிய வர்த்தகத்தில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் ஜூலை மாதம் கையெழுத்திட்டது. 150 எரிபொருள் நிலையங்கள் மூலம் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும் மற்றும் விற்பனை செய்யவும் 20 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களில் புதிய தானியங்கி விநியோகிப்பான்கள், மின் கட்டண நிலையங்கள், மினி மார்க்கெட்கள் மற்றும் கஃபேக்கள் மூலம் எரிபொருள் நிலையங்களை மேம்படுத்துவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்