பொரளை, கோட்டா வீதி பகுதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல உண்மைகள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் நேற்று (23) பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பெண் முன்னர் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டவர் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பெண் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையானவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோட்டா வீதி பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் திருடும்போது பிடிபட்ட பின்னரே பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அந்தப் பெண் நிலத்தில் விழுத்தப்பட்ட தாக்கப்பட்டதை தொடர்ந்து தனது மேலாடையை கழற்றி விட்டு, உள்ளாடையுடன் நின்றார். தாக்குதலாளிகளை விலகச் செய்யவெ இந்த உத்தியை கையாண்டார்.