தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக
தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்று திங்கட்கிழமை (22) மாலை மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
6.30 மணியளவில் தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகத்தை மூன்று பிள்ளைகளின் மாவீரர்களின் தாய் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார்.
தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0173.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0191.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0167.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0177.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0171.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0156-1.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0186.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0149.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0178.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0150.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230922-WA0152.jpg)