27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

‘எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை வெளிப்படுத்துவோம்’: சஜித் சூளுரை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 31 பேரை திடீரென இடமாற்றம் செய்தமையும், 700 அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதித்தமையும் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறியும் உள்ளூர் பொறிமுறையானது ஊழல் நிறைந்ததாக இருப்பதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகமது சஹாரான் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் மிக நெருங்கிய தொடர்புடையவர் எனவும், தேசிய பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்த அதிகாரியை விசாரிக்க வேண்டாம் என உயர் அதிகாரிகள் கூறியுள்ளமை குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது:

இந்த சம்பவத்தின் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
சனல் நான்கு என்று சொல்லத் தேவையில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருந்தோம். சிலர் தூங்கியிருக்கலாம். 9/11 தாக்குதல் பற்றிய அறிக்கைகளை நீங்கள் பெறலாம். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மை ஏன்  மறைக்கப்படுகிறதுஃ கமிஷன் அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்த வேண்டும். இம்முயற்சி கொச்சைப்படுத்துவதற்காக அல்ல. உண்மையைத் தேடுங்கள்.

உண்மை இன்னும் வெளிவரவில்லை. உளவுத்துறை அதிகாரி ஒருவர் சஹாரானை அதிகம் கையாண்டுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த அதிகாரியை விசாரிக்க கூடாது என சிலர் கூறியிருந்தனர். இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு ஏன் பொறுப்பேற்கவில்லை என்று எஸ்ஐஎஸ் அதிகாரியிடம் கேட்கப்பட்டுள்ளது. இதை கேட்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? Sonic  Sonic பிரச்சினையும் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். தாஜ் கொட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் முன் ஜமீல் வீட்டிற்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சென்றது ஏன்? இதையும் விசாரிக்க வேண்டும். இந்த தாக்குதலை விரைவுபடுத்தும் வகையில் சஹாரன்களுக்கு செய்திகள் வந்தன. அபுஹீன் யார்? சஹாரானுக்கு மேலே ஒரு தலைவன் நிச்சயமாக இருந்தான்.
அபுஹீன் தான். அவர் யார் என்பதை கண்டறிய விசாரணை தேவை.

சாரா ஜாஸ்மினிடமும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். கோட்டாபய 18 ஜனாதிபதியாகிறார். நவம்பர் 22ஆம் திபதி பிரதமர் நியமிக்கப்படுவார். அதற்கு முன்னரே ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த 31 பேர் கோட்டாபயவின் உத்தரவின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டனர். எழுநூறு ரகசிய போலீஸ் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதைப் பற்றியும் கண்டுபிடிக்க வேண்டும். ஏப்ரல் 4 கலனிகம நுழைவாயிலுக்கு ஒரு லொறி வந்தது. பின்னால் ஒரு V-Eight வருகிறது. பின் மற்றொரு வாகனம் வருகிறது. இந்த டிரக்கை விடுவிக்குமாறு மேற்கு டிஐஜி ஒருவர் கூறுகிறார். இதையும் விசாரிக்க வேண்டும்.

கசப்பாக இருந்தாலும் உண்மை தெரிய வேண்டும்.

இத்தாக்குதல் குறித்து பேராயர் மல்கம் ரஞ்சித்துக்குத் தெரியும் என்று இங்குள்ள உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஆயர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். நேர்மையான பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர ஏன் வேட்டையாடப்படுகிறார்? கோட்டாபய அந்த வேட்டையை ஆரம்பித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நாமும் பொறுப்புடன் இருக்க வேண்டும். உண்மையைக் கண்டறிய கலப்படமற்ற வழிமுறை தேவை. உள்ளூர் பொறிமுறை சிதைந்துள்ளது. இதனால்தான் சர்வதேச விசாரணை தேவை. அப்படிச் செய்யாவிட்டால், நமது அரசாங்கத்தின் கீழ் உண்மை தேடப்படும். அந்தக் கடமையைச் செய்வோம் என உறுதிமொழி வழங்குகிறோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment