நீர் விநியோகத்தை துண்டிக்க சென்றவருக்கு நேர்ந்த கதி

Date:

நீர் விநியோகத்தை துண்டிக்க வந்த உத்தியோகத்தர்களை தாக்கிய நபருக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பணிப் பரிசோதகர் சிகிச்சைக்காக பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரகம மெதகம, மினிமுத்து மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் 32000 ரூபா குடிநீர் கட்டணம் பல மாதங்களாக செலுத்தப்படாமையால் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குழுவொன்று நீர் இணைப்பை துண்டிக்க சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துவிட்டு, பைப் விநியோகத்தை துண்டித்துள்ளனர்.

உடனே வீட்டுக்குள் இருந்து வந்த நபர், உத்தியோகத்தர் ஒருவரை கல்லால் தாக்கி, சட்டை கொலரை பிடித்து உதைத்து, மண்வெட்டியை எடுத்து “தண்ணீர் கொடுங்கள் இல்லை என்றால் நாலு பேரையும் இங்கேயே கொன்று விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன குழுவினர், நீர் விநியோகத்தை சரி செய்து விட்டு அங்கிருந்து வெளியேறி பொலிசில் புகார் செய்தார்.

spot_imgspot_img

More like this
Related

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்