2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பு தசுன் ஷானகவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரை தசுன் ஷனக்கவுடன் இணைந்து செயற்பட தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவின் விசேட கூட்டம் இன்று காலை இடம்பெற்றதாகவும், குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் வரை இடம்பெற்றதாகவும் தெரிய வருகிறது.
கிரிக்கெட் நிறுவனத்தின் கூட்டத்தில் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க மற்றும் அதன் உறுப்பினர் ரொமேஷ் களுவிதாரண ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் தெரிவுக்குழுவிற்கும் தசுன் ஷனக்கவிற்கும் இடையில் நீண்டநேரம் தகவல் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இறுதியில் உலகக் கிண்ண அணியையும் தசுன் ஷனக வழிநடத்த வேண்டும் என தெரிவுக்குழு கருத்து தெரிவித்துள்ளது.




