யாழ் மாவட்ட ஆதார வைத்தியசாலைகளில் போராட்டம்

Date:

யாழ் மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் இன்று (20) கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த 12ஆம் திகதி யாழ் மாவட்டம் தவிர்ந்த வட மாகாணத்தில் உள்ள ஏனைய 4 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில், யாழ் மாவட்டத்திலுள்ள ஆதார வைத்திய சாலைகளான சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளில் இன்று (20) நண்பகல் 11:30 மணியிலிருந்து 1 மணி வரையிலும் போராட்டம் நடந்தது.

நாளை 21 ஆம் திகதி நண்பகல் 11.30 மணியிலிருந்து 1 மணி வரையில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்