97 வயதான விதானகே லீலாவதி அஸ்லின் தர்மரத்ன, களனிப் பல்கலைக்கழகத்தின் பாலி பௌத்த கற்கைகள் முதுகலைப் பட்ட நிறுவனத்தினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பௌத்த கற்கையில் முதுமாணிப் பட்டத்தை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவியும் அவர்தான்.
7 பாடங்களைக் கொண்ட இந்த முதுகலைப் பட்டத்திற்கு, பாலி நிகாயா கதா பௌத்த சிந்தனை – பகுப்பாய்வு மற்றும் வர்ணனை, புத்த கலை மற்றும் கட்டிடக்கலை 11 (இலங்கை) பௌத்த உளவியல், புத்த பொருளாதார தத்துவம், தேரவாத பாரம்பரியம் – வரலாறு மற்றும் தர்ம விஷயங்கள், பௌத்த நெறிமுறைகள் – கருத்துக்கள் மற்றும் தத்துவ விளக்கம், ஆராய்ச்சி முறை மற்றும் விரிவாக்கம் ஆகியவை பாடங்களில் தோற்றியுள்ளார்.
அஸ்லின் தர்மரத்ன தனது 94வது வயதில் வித்தியோதயா பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி பரீட்சையில் சித்தியடைந்தார்.
இவர் 6 பெண் குழந்தைகளின் தாயாராவார்.
1952 இல் இலங்கையிலில் நொத்தாரிசாக சித்தியடைந்த முதல் பெண்மணியும் இவரே ஆவார்.