27.7 C
Jaffna
September 23, 2023
இலங்கை

உடுப்பிட்டி மதுபானச்சாலைக்கு எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உடுப்பிட்டி சந்தியில் இன்று காலை இந்த போராட்டம் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

மதுபான சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு சில தினங்களுக்குள் மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய கூரை கழன்று விழுந்து 2 பேர் காயம்!

Pagetamil

நல்லூரில் திலீபன் ஆவணக்காப்பகம் திறப்பு: வரலாற்றை அறிய இளையவர்கள் முண்டியடிப்பு!

Pagetamil

பாணுக்குள் பீடித் துண்டு!

Pagetamil

யாழில் 33 வருடங்களின் பின் ஆலயத்தில் வழிபட அனுமதித்த இராணுவம்!

Pagetamil

பேராதனை பல்கலை மருத்துவபீடத்தில் பயின்ற மன்னார் மாணவன் திடீர் மரணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!