நானுஓயா கிரிமெட்டிய பிரதேசத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் வீதிக்கு அருகில் அமைந்துள்ள படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நானுஓயா, கிளாரெண்டர் தோட்டத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் (08) உறவினர் வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1