மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். முக்கிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வரலாற்று அடையாளங்கள் சேதமாகின.
மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலையில் நிலநடுக்கத்திற்கு அருகிலுள்ள மாகாணங்களில் குறைந்தது 296 பேர் இறந்ததாகக் கூறியது. மேலும், காயமடைந்த 153 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மராகேச்சில் உள்ள பழைய நகரத்தைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற சிவப்பு சுவர்களின் பகுதிகள் சேதமடைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகள் மற்றும் தூசிகள் போன்றவற்றைக் காட்டும் வீடியோக்களை மொராக்கோ மக்கள் வெளியிட்டனர். சுற்றுலாப் பயணிகளும் மற்றவர்களும் அலறி அடித்துக்கொண்டு நகரத்தில் உள்ள உணவகங்களை காலி செய்யும் வீடியோக்கள் காணப்பட்டன.
Horrific moment of collapse caught on security camera💔 #Morocco #earthquake #moroccoearthquake #deprem #زلزال #زلزال_المغرب #fas #fas_depremi #morocco #maroc #earthquake pic.twitter.com/cpS0FtBs6L
— Muhammad Arif Khan (@M_Arif61) September 9, 2023
பல நிலநடுக்கங்களுக்குப் பிறகு, குறிப்பாக நள்ளிரவில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய இறுதி தகவல்கள் வெளியாக காலஅவகாசம் தேவை.
பல வினாடிகள் நீடித்த குலுக்கலுடன் முதற்கட்ட நிலநடுக்கம் 11:11 மணியளவில் ஏற்பட்ட போது 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நெட்வொர்க் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக இருந்தது. 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப அளவீடுகளில் மாறுபாடுகள் ஏற்படுவது வழக்கமானது. என்றாலும், இந்த அளவுகள் மொராக்கோவின் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வலிமையானதாக இருக்கும். வட ஆபிரிக்காவில் பூகம்பங்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்றாலும், 1960 இல் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அகாடிருக்கு அருகில் தாக்கி ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியது.
🚨🚨🇲🇦Following the 7.1 earthquake striking Morocco, the Kutubiyya Mosque may collapse 😨#Earthquake #Seisme #زلزال pic.twitter.com/SFB0Kqr16u
— AkramPRO (@iamAkramPRO) September 9, 2023
வெள்ளிக்கிழமை நிலநடுக்கத்தின் மையம் மராகேக்கிற்கு தெற்கே சுமார் 70 கிலோமீட்டர் (43.5 மைல்) தொலைவில் உள்ள அட்லஸ் மலைகள். இது வட ஆபிரிக்காவின் மிக உயரமான சிகரமான டூப்கல் மற்றும் பிரபலமான மொராக்கோ ஸ்கை ரிசார்ட்டான ஒகைமெடனுக்கு அருகில் இருந்தது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 18 கிலோமீட்டர்கள் (11 மைல்) கீழே மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது, மொராக்கோவின் நில அதிர்வு நிறுவனம் அதை 8 கிலோமீட்டர் (5 மைல்) என்றது.
நிலநடுக்கம் போர்ச்சுகல் மற்றும் அல்ஜீரியா வரை உணரப்பட்டது.