வேல்ஸில் மருமகள்களை காப்பாற்ற நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்த விமானியான யாழ் இளைஞன்!

Date:

வேல்ஸில் உள்ள நீர்வீழ்ச்சியில் சிக்கிய தனது இரண்டு மருமக்களைக் காப்பாற்றிய தமிழ் இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த 27 வயதுடைய மோகனநீதன் முருகானந்தராஜா என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் பயிற்சி விமானியாவார்.

பிரேகன் பீக்கன்ஸ் தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படும் Bannau Brycheiniog நீர்வீழ்ச்சியில் தனது சகோதரியின் குழந்தைகளை மீட்க முயன்றபோது அவர்  உயிரிழந்தார்.

செப்டம்பர் 1, வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணியளவில், இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக, நீர்வீழ்ச்சியில் ஒரு நபர் தண்ணீருக்குள் சென்றதாகவும், குழந்தைகளை காப்பாற்றிய பின்னர் அவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அவரது உடல் நீருக்கடியில் கமராவின் உதவியுடன் இரவு 7 மணிக்குப் பிறகு தண்ணீரில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், தளத்தில் நிலைமை காரணமாக அன்று மாலை அதை மீட்க முடியவில்லை, மறுநாள் காலையில் சுழிஜயொடிகள் வரவழைக்கப்பட்டு, சடலம் மீட்கப்பட்டது.

மோகனநீதனின் மருமகள் ஊடகங்களிடம் கூறுகையில்: “எனது சகோதரிகளில் ஒருவர் தண்ணீரில் இழுக்கப்பட்டார். எல்லோரும் அவருக்கு உதவ வந்தனர். அந்த நேரத்தில் நீரோட்டம் எங்களை அருவியை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது. எங்களை ஒவ்வொருவராக வெளியே இழுக்க என் மாமா உள்ளே வந்தார்.

எங்களை காப்பாற்றிய பின்னர் மாமாவின் கைகள் தண்ணீருக்கு அடியில் மறைந்தன. அவர் எங்களுக்கு ஏதோ விளையாட்டு காட்டுகிறார்- நீருக்கடியில் நீந்தி எங்கள் கால்களை பிடித்து பயமுறுத்துவதை போல- ஏதாவது செய்யப் போகிறார் என நினைத்தோம்” என்று அவர் கூறினார்.

நீர்வீழ்ச்சிக்கு மாலை 4.40 மணியளவில் ஏர் ஆம்புலன்ஸ் உட்பட அவசரக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர், ஆனால் மோகனநீதனை காப்பாற்ற முடியவில்லை.

மருமகள் கூறினார்: “என் அம்மாவுக்கு நீந்தத் தெரியாது, அதனால் அவர் மாமா பிடித்துக் கொள்ளட்டும் என கரையிலிருந்தவற்றை எறிந்தார். அப்பகுதியில் ஒரு சில மருத்துவர்கள் தங்களால் இயன்ற இடத்தில் உதவ முயன்றனர், பின்னர் துணை மருத்துவர்கள் வந்தனர். மக்கள் எங்களை மீண்டும் எங்கள் கார்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர், ஆனால் வெளியேறுவது தவறானது.  ஏனென்றால் என் மாமா, அவர் நீருக்குள் மூழ்கியிருந்தார்”

அந்த நீர் வீழ்ச்சியின் ஆபத்தான தன்மை பற்றி போதுமான எச்சரிக்கைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லையென உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

Sgwd Y Pannwr நீர்வீழ்ச்சியானது, கிட்டத்தட்ட 40 அடி உயரத்தில் இருந்து விழும் அருவிகளால், நடைபயிற்சி செய்பவர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மத்தியில் பிரபலமானது.

இது “ஃபுல்லரின் வீழ்ச்சி” என்றும் அழைக்கப்படுகிறது. அஃபோன் மெல்டே ஆற்றில் அமைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்