28.3 C
Jaffna
June 16, 2024
முக்கியச் செய்திகள்

‘அந்த நாய் லசந்த என்னுடன் விளையாடுகிறது… உடனடியாக கொல்லுங்கள்’; மூடிய அறைக்குள் பிள்ளையானிடம் கட்டளையிட்ட கோட்டா: சனல் 4 வெளிப்படுத்தும் தொடர் அதிர்ச்சி தகவல்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை வெளிப்படுத்திய சனல் 4 தொலைக்காட்சியின் முழுமையான ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

Sri Lanka’s Easter Bombings: Dispatches என்ற பெயரில் இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

பிள்ளையானின் தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளராக செயற்பட தொடங்கி, அந்த அமைப்பின் முக்கியஸ்தராக மாறியிருந்த ஆசாத் மௌலான தற்போது நாட்டிலிருந்து வெளியேறி சுவிற்சர்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் இதில் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இதில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தவிர்ந்த, வேறு பல கொலைகளையும் வெளிச்சமிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் பிள்ளையான் குழுவான இயங்கிய குழு, எப்படி இராணுவக்கூலிப்படையாக இயங்கியது என்பதற்கான பல்வேறு தகவல்களை ஆசாத் மௌலானா வெளிப்படுத்தியுள்ளார்.

பிள்ளையானின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட ஆசாத் மௌலானா, அந்த குழுவின் உள்ளக விவகாரங்களை முழுமையாக அறிந்தவர். பிள்ளையான் உள்ளிட்ட துணைப்படை உறுப்பினர்களுக்கு ஆங்கிலம், சிங்களம் தெரியாத காரணத்தினால், அரச, இராணுவ, உளவுத்துறை உயர்மட்டத்தினர் வழங்கும் கட்டளைகளை ஆசாத் மௌலானாவே மொழிபெயர்த்து, அந்த குழுவினருக்கு தெரிவித்து வந்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையின் பின்னணி பற்றிய தகவல்களையும் சனல் 4 வெளிப்படுத்தியுள்ளது.

இதில் ஆசாத் மௌலான தகவல் வெளியிடுகையில்-

திரிபோலி படைப்பிரிவு என்று அழைக்கப்படும் ஒரு துணை இராணுவ மரணப் படைக்கு உங்களிடமுள்ள சிறந்த ஆட்களை தந்து உதவுமாறு கோட்டாபய கேட்டதால், பிள்ளையான் தனது ஆட்களை திரிபோலி படைப்பிரிவில் வேலை செய்ய வைத்தார். அந்த பிரிவு கோட்டாபயவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கியது. அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அவர்கள் தெரிவு செய்து கொன்றார்கள்.

பிள்ளையானையும் என்னையும் கோட்டாபய சந்திப்பிற்கு அழைத்தார். கோட்டாபயாவை அவரது அறையில் சந்தித்தோம். அவருக்கு முன்னால் சண்டே லீடர் பேப்பர் இருந்தது. அவர் ‘இந்த பல்லா (நாய்) எப்பொழுதும் என்னுடன் விளையாடுகிறது’ என்றார். மேலும் லசந்த கொல்லப்பட வேண்டும் என்கிறார். உங்களால் முடிந்தால், உடனடியாகச் செய்யலாம் என்றார். கூடிய விரைவில் செய்யச் சொன்னார்“ என்றார்.

கோட்டாபய ஜனாதிபதியானதும் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வாவும் இந்த ஆவணப்படத்தில் தோன்றியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச, இராணுவ, கடற்படை புலனாய்வாளர்களால் தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டதால் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக குறிப்பிட்டார்.

அத்துடன், லசந்த விக்ரமதுங்க கொலையில், திரிபோலி பிளாட்ரூனின் 5 பேருக்கு தொடர்புள்ளதை கண்டறிந்தேன். தொலைபேசி பகுப்பாய்வின் வழியாக அது கண்டறியப்பட்டது. அவர்கள் லசந்தவின் போக்குவரத்து பாதையை அவதானித்து கொலை செய்திருந்தனர். திரிபோலி பிளாட்டூன் கோட்டாபயவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கியது. அதனால் அந்த விசாரணைக்கு கோட்டாபயவுக்கு அழைப்பாணை விடுத்தேன்.

லசந்த கொலை வழக்கில் எனது பெயரை சந்தேகநபராக ஏன் பெயரிட்டாய் என கோட்டாபய கேட்டார்.

தேவையானதை மட்டும் செய்யுங்கள். தேவையில்லாததை விட்டு விடுங்கள். நீங்கள் யார் என்பதை நான் கவனிக்க மாட்டேன் என்றேன். கோட்டாபய என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என நிசாந்த சில்வா தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனில் அமைதி திரும்ப முக்கிய நிபந்தனைகள்: புடின் அறிவிப்பு!

Pagetamil

‘யாழில் டெஸ்ட் மட்ச் கிரவுண்ட் இருக்கிறதா என ஏன் கேட்டேன்?’: சஜித் விளக்கம்!

Pagetamil

‘தமிழ் பொதுவேட்பாளர் இல்லையென்றால் நானே பொதுவேட்பாளராக போட்டியிடுவேன்’: இந்தியாவிலிருந்து வந்ததும் பகீர் கிளப்பும் சிவாஜி!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர் என்பது பொது பேரழிவாக அமையும்; அனைத்து மக்களின் இணக்கத்தின் பின்னரே 13 முழுமையாக அமுல்ப்படுத்தப்படும்: யாழில் சொன்னார் சஜித்!

Pagetamil

கிளிநொச்சி மருத்துவமனையில் பயன்படுத்த ஆளில்லை… யாழில் தனியார் மருத்துவமனையில் செயலமர்வு: வடக்கில் விஸ்பரூபமெடுத்துள்ள கருவுறு சிகிச்சை வணிகம்!

Pagetamil

Leave a Comment