29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
குற்றம்

கொள்ளையனுடன் மல்லுக்கட்டிய பெண்!

வீடொன்றுக்குள் நுழைந்த முகமூடிக் கொள்ளையன், வீட்டுக்கார்களிடம் வசமாக சிக்கி, பிரதேசவாசிகளால் நையப்புடைக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹோமாகம, பிடிபன, குணவர்தன மாவத்தையில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் விற்பனை அதிகாரிக்கு சொந்தமான வீட்டில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் மூகமூடி அணிந்து, கையில் கத்தியுடன் இந்த வீட்டை கொள்ளையிட வந்துள்ளார்.

கொள்ளையன் நுழைந்ததை அவதானித்த வீட்டு உரிமையாளர், கொள்ளையனை பிடிக்க முற்பட்டுள்ளார். எனினும், தன்னிடமிருந்த கத்தியால் அவரை தாக்க கொள்ளையன் முயன்றுள்ளார்.

இருவருக்குமிடையில் மோதல் நடந்த நிலையில்,  வீட்டின் உரிமையாளரின் மனைவி மற்றும் இரண்டு வயது மகளும் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.  கொள்ளையன் அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன்போது, அதிரடியாக செயற்பட்ட மனைவி, கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளார். இந்த சமயத்தில் கொள்ளையனிடமிருந்த பெரிய கத்தியை பறித்த கணவன், அதனால் கொள்ளையனை அடித்துள்ளார்.

கொள்ளையனின் உடலில் பல இடங்களில் கத்தியின் முனை மழுங்கிய பகுதியால் கடுமையாக அடிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு கூடிய பிரதேச மக்களும், தமது பங்கிற்கு ஒவ்வொன்று போட, கொள்ளையன் நொற்து நூலாகிப் போனார்.

பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளையனை கைது செய்து, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த 48 வயதானவரே கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment