மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எட்டு வைத்தியசாலைகளில் உள்ள உள்நோயாளிகளுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்பட்ட உலர் உணவுக்கான கட்டணத்தை வழங்குமாறு கோரி திருகோணமலை மாகாண சுகாதார திணைக்கள வளாகத்தில் மூன்று விநியோகஸ்தர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
விநியோகஸ்தர் ஒருவருக்கு 15 மில்லியன் ரூபாவும், மற்றொரு விநியோகஸ்தருக்கு ஆறு மில்லியன் ரூபாவும், மற்ற விநியோகஸ்தருக்கு ஒரு மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்த பணம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜி.எம்.கொஸ்தா, பணம் கிடைக்காத பிரச்சினையை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துடன் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
ஒப்பந்தத் தொகைக்கு வெளியில் பணிபுரிந்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கும் எனவும் இதற்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரே பொறுப்பு எனவும் தெரிவித்தார்.