பூனாவ கடற்படை முகாமில் உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பயிலுனர் சிப்பாய் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம், திரப்பனை பகுதியைச் சேர்ந்த நிமந்த டில்ஷான் ஜயரத்ன என்ற சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் கடற்படையில் இணைந்துகொண்ட அவர், நேற்று முன்தினம் மாலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சுகவீனமடைந்து பூனாவ கடற்படை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1