உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் தெருவோர பானிப்பூரி வியாபாரிக்கும், வாடிக்கையாளருக்குமிடையில் நடந்த மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.
ராம் சேவக் என்பவர் தெருவோரம் பானிப்பூரி விற்கிறார். அப்போது, கிஷோர் குமார் என்று அழைக்கப்படும் வாடிக்கையாளர், பானிப்பூரி வாங்கச் சென்றுள்ளார். 10 ரூபாவுக்கு 7 பானிப்பூரியென்றுள்ளார் ராம் சேவக்.
இது அநியாயம் என கிஷோர் குமார் தகராறு செய்ய, வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, ராம் சேவக்கை கடுமையாக தாக்கியுள்ளார் கிஷோர் குமார் .
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஹமிர்பூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசார் வருவதற்குள் கிஷோர் குமார் அங்கிருந்து தப்பியோடினார். இருப்பினும், அந்த வீடியோ அவரை அடையாளம் காண அதிகாரிகளுக்கு உதவியது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட ராம் சேவக், சட்டப்பூர்வ நடைமுறைகளில் ஈடுபடத் தயங்குகிறார். போலீசில் முறையான புகார் அளிப்பதில்லையென முடிவெடுத்துள்ளார்.
Kalesh b/w a Golgappa seller and Customer over 10rs me 7 golgappa hi kyu? pic.twitter.com/kpa0kIeiQ8
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 30, 2023