Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

‘டிசிசி நடத்துகிறார்களாம்… டிசிசி’: விகாரைக்கு அனுமதிகோரி அபிவிருத்திக்குழு கூட்டத்துக்குள் நுழைந்து பிக்குகள் காட்டுத்தனம்!

திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதேச செயலகத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டகாரர்களால் இக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

விகாரை அமைக்கப்படவிருந்த அரச காணியில் அத்துமீறி நுழைய முடியாது என பிரதேச செயலாளரால் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த கடிதம் வாபஸ் பெறப்பட்டு, பிக்குகள் அந்த காணிக்குள் நுழைவதில் எந்த ஆட்சேபணையும் இல்லையென பிரதேச செயலகத்தினால் புதிய கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருக்கோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு சமூகமாகும். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறானதொரு செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக செயற்படுவீர்கள் என தெரிவித்தார்.

மேலும் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

தாயை கொன்ற மகன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!