வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 47 வயதுடையவர்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





