ரூ.25,000 இலஞ்சம் வாங்கியவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Date:

சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் இணக்கச் சான்றிதழை வழங்குவதற்கு 25,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பேருவளை பயாகல உப அலுவலகத்தின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 5 ஆண்டுகள் வீதம், 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்து ஆண்டுகளில் தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 5,000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட இலஞ்சத் தொகையையும் அபராதமாக செலுத்துமாறும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை வழங்கினார்.

பேருவளை பயாகலை உப பிராந்திய அலுவலகத்தில் பணிபுரியும் முன்னாள் தொழிநுட்ப உத்தியோகத்தர் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி அலுவலகத்தில் கடமையாற்றும் போது ரூபா 25,000 இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கெலனி ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை!

கெலனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை...

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – சீரற்ற காலநிலை காரணம்

நிலவும் கடும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து...

தையிட்டியில் ரூ.8.9 மில்லியன் விளையாட்டு திட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்