ஹொரண பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் பெண்களுக்கான உள்ளாடைகளை அணிந்திருந்த நிலையில் வியாழக்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இளம் பெண் ஒருவர் காயவிடும் உள்ளாடைகள் அடிக்கடி திருடப்பட்டு வந்தது. யாரோ இரவில் தனது வீட்டுக்கு வந்து உள்ளாடைகளை திருடுவதை அவர் உணர்ந்தார்.
கடந்த 23ஆம் திகதி இரவு அந்த யுவதி காயவிட்ட உள்ளாடைகளை ஒருவர் திருடுவதை அவதானித்த சத்தமிட்டதை தொடர்ந்து, அயலவர்கள் அந்த நபரை பிடிக்க முற்பட்டனர். எனினும், அவர்களிடமிருந்து தப்பித்து கம்பி வேலி வழியாக இராணுவ முகாமுக்குள் அந்த நபர் நுழைந்து விட்டார்.
நேற்று முன்தினம் (24) சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கு வந்து தயாராக இருந்தனர். உள்ளாடை திருடனின் கவனத்தை ஈர்க்கும் விதமாக புதிய உள்ளாடைகள் சிலவற்றை யுவதி கொடியில் காயவிட்டுள்ளார்.
இதைப்பார்த்து சபலமடைந்த திருடன் இரவு நேரம் பதுங்கி வந்து, அவற்றை எடுத்த போது, பதுங்கியிருந்தவர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
சோதனையின் போது, அவர் அயலிலுள்ள இராணுவ முகாமின் சார்ஜன்ட் என்பது தெரிய வந்தது. அவர் பெண்ணின் உள்ளாடைகளை அணிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது முந்தைய நாள் திருடப்பட்டது என்று அந்தப் யுவதி அடையாளம் காட்டினார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதன்படி, நிக்கவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குருவாதொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




