26.8 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

பாராளுமன்றத்தின் மற்றொரு ஊழியரும் பணிநீக்கம்

நீண்ட காலமாக அதே திணைக்களத்தைச் சேர்ந்த சில பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் காரணமாக பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்புத் திணைக்களத்தின் மற்றுமொரு ஊழியர் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதன்படி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவினால் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் உதவியாளர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த ஊழியர் அந்த திணைக்கள அதிகாரி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உதவியதாக விசாரணைகளின் போது தெரியவந்ததையடுத்து பாராளுமன்ற செயலாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, பாராளுமன்ற வீட்டு பராமரிப்பு துறையின் உதவிக்காப்பாளர் முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கை இன்னும் சில நாட்களில் பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றிய பிரதி அமைச்சர் மீது குற்றச் சாட்டு

east tamil

கிளிநொச்சியில் 25 கிலோ கஞ்சா மீட்பு!

east tamil

பெண் எம்.பியின் முறைப்பாட்டால் ஒருவர் கைது!

Pagetamil

ஐ.தே.கவின் பொதுச்செயலாளரானார் தலதா!

Pagetamil

Leave a Comment