பொன்னியின் செல்வன் சாதனையையும் முறியடித்த ஜெயிலர்

Date:

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வருவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.375 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. தற்போது படம் வெளியாகி 15 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை உலக அளவில் படம் ரூ.525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது ‘2.0’ படத்துக்குப் பிறகு ரஜினியின் இரண்டாவது ரூ.500 கோடி க்ளப் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கமலின் ‘விக்ரம்’ படம் ஒட்டுமொத்தமாக உலக ரூ.430 கோடி வரை வசூலித்திருந்தது. தற்போது அந்த சாதனையை ‘ஜெயிலர்’ முறியடித்துள்ளது. மிகப் பெரிய ஹிட்டான ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தின் ரூ.500 கோடி வசூலையும் ‘ஜெயிலர்’ முறியடித்து முன்னேறி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்