காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

Date:

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் அவ்வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், காரைதீவு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் அஜந்தா உள்ளிட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, வைத்தியசாலையின் நடப்புச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களையும் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்ககளையும் சந்தித்து கலந்துரையாடிய பிராந்திய பணிப்பாளர், வைத்தியசாலையின் தற்போதைய அத்தியாவசிய தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மற்றும் அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இதன்போது உரிய தீர்வுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி “நீதியின் ஓலம் 2” போராட்டம் நாளை ஆரம்பம்!

செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி  “நீதியின் ஓலம் 2”  கவனயீர்ப்பு...

செல்வச்சந்நிதி வருடாந்த மஹோற்சவம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய 2026ஆம் ஆண்டு மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்  வரலாற்றுச் சிறப்புமிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்