அவிசாவளையில் உள்ள வர்த்தக வளாகத்தில் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் 5 மில்லியன் ரூபாவைத் தேடி விசாரணையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல பொலிஸாரிடம் கேகாலை பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கேகாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினால் தற்போது இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணிசமான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே 26ஆம் திகதி அவிசாவளையில் உள்ள மேற்படி வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் வங்கியில் வைப்பிலிடச் சென்ற போது 5 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட பணத்தின் பதிவுகளை பதிவு செய்யாமல் விசாரணையாளர்கள் திருடப்பட்ட பணத்தில் 1 முதல் 1.5 மில்லியன் வரை மோசடி செய்து தமக்குள் பகிர்ந்து கொண்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் ராஜபக்ஷவுக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அதிகாரிகள் உறுதியான தகவல்களைக் கண்டறிந்துள்ளனர், தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.