காதலியை கரம்பிடித்தார் நடிகர் கவின்

Date:

நடிகர் கவினுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர் கவின். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 2017ஆம் ஆண்டு வெளியான ‘சத்ரியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். 2019ஆம் ஆண்டு நடந்த ‘பிக்பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு கவின் நடித்து வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தனது காதலியான மோனிகாவுடன் கவினுக்கு இன்று (20) சென்னையில் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கவின் அடுத்ததாக நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்