மரணச்சடங்கில் கூடிய இளைஞர்கள்; சிகரெட் வாங்கச் சென்றபோது நிகழ்ந்த விபத்து: யாழில் 2 இளைஞர்கள் உயிரிழந்த விபத்தின் பின்னணி!

Date:

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை, கலிகை பகுதியில் இன்று (20) அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இருவரும், வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்ப்பக்கமிருந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

அதிகாலை 1.20 மணியளவில் விபத்து நடந்தது.

இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

தபால்கட்டை, யாழ்ப்பாண பல்கலைகழகம் முன் என்ற முகவரியை சேர்ந்த செல்வநாயகம் வென்சன் (31), புதிய சந்தை, வதிரி என்ற முகவரியை சேர்ந்த விஜயபாரத் நிசாந்தன் (28) ஆகிய இளைஞர்களே உயிரிழந்தனர்.

உயிரிழந்த வென்சன் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிகிறார். நிசாந்தன், நெல்லியடி, வதிரிச்சந்தியில் மரக்கறி கடையொன்றை நடத்தி வருகிறார்.

அவரது கடைக்கு எதிராக உள்ள- உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அவரது இறுதிச்சடங்கு நடக்கவிருந்தது. உயிரிழந்த இளைஞர்களும், நண்பர்களும் இரவு முழுவதும் இறுதிச்சடங்கிலேயே நின்றுள்ளனர்.

இளைஞர்கள் கூட்டமாக நின்றதால் புகைப்பதற்கு சிகரெட் தேவைப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரமென்பதால், துன்னாலை பகுதியிலுள்ள அறிமுகமான கடையொன்றில் சிகரெட் வாங்கலாமென இருவரும் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முன்பான உணவகத்தில் பணியாற்றும்  வென்சனுக்கு அந்த பாதை அவ்வளவு பரிச்சயமற்றது. அவரே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளார். வீதியின் ஆபத்தான வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்