மட்டக்களப்பில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற 5 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகினர்

Date:

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் அக்குரானை ஆஞ்சநேயர் கோயிலுக்கு இன்று (11) வழிபாட்டுக்குச் சென்றவ 5 பேர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

சித்தாண்டியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், அதே இடத்தைச் சேர்ந்த இளைஞனும், மாவடிச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவரும் இவ்வாறு பாதிப்பிற்ள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

வழிபாட்டிற்கு சென்றவர்கள் அங்கு கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக அருகில் இருந்த மரத்தின் கீழே சென்று அங்கிருந்த உழவு இயந்திரத்தின் மறைவில் இருந்துள்ளனர்.

இதன்போது திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் இலக்காகி 5 பேரும் அதிர்ச்சிக்குள்ளாகி மயக்கமுற்றனர்.

பின்னர் அவர்கள் வழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

-ரூத் ருத்ரா-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்