மாகாணசபை முறைமையை நாம் கைவிட முடியாது. மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்துவதாக பல நாடுகளுக்கு நாம் வாக்குறுதியளித்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் 13வது திருத்தம் தொடர்பில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
மாகாணசபைகளிற்காக வருடாந்தம் அரை பில்லியன் செலவிடப்படுகிறது. இந்த பணம் வீணாண பணமாக அல்லாமல், வினைத்திறனாக மாற்ற திட்டம் வகுக்க வேண்டும்.
பிரதேச செயலாளர்களை நியமித்தல், கல்வித்துறை, பாடசாலை சார்ந்த அனைத்து விடயங்கள், பல்கலைகழகங்களை உருவாக்குதல், வாழ்க்கை, தொழில், மாகாண சுற்றுலா உள்ளிட்ட விடயங்களை மாகாணங்களிற்கு வழங்க பரிந்துரைக்கிறேன் என்றார்.




