மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம் தேர்தலில் போட்டியிட தடை!

Date:

சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்க மாலைதீவு உயர் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (6) தடை விதித்தது.

ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் யாமீன் தற்போது 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு யாமீனின் மாலைதீவுகளின் முன்னேற்றக் கட்சிக்கு (பிபிஎம்) பின்னடைவாக அமைந்ருள்ளது.

இந்த தீர்ப்பின் பின்னரும் மாலைதீவுகளின் முன்னேற்றக் கட்சி மற்றொரு வேட்பாளரை பரிந்துரைக்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பின்னர் யாமீன் சிறையில் இருந்து போட்டியிடலாம் என்று நம்புகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கயூம் தாக்கல் செய்த வேட்புமனுவை, அந்த நாட்டு தேர்தல் ஆணைக்குழு நிராகரித்தது. அவர் சிறையிலிருப்பதை காரணமாக காட்டியிருந்தது. இதற்கு எதிராக மாலைதீவுகளின் முன்னேற்றக் கட்சிக்கு கடந்த வாரம், நீதிமன்றத்தை நாடியது. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அரசியலமைப்பு முன்நிபந்தனைகளை தேர்தல் ஆணைக்குழு தவறாகப் புரிந்துகொண்டதாக வாதிட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது....

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள்...

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்