11 வயது மகளின் கை, கால்களை கட்டி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய தந்தை; பக்கத்தில் இருந்து பார்த்து ரசித்த 2வது மனைவி: இலங்கையில்தான் சம்பவம்!

Date:

11 வயதுடைய மகளை கை கால்களை கட்டி கட்டிலில் வைத்து சித்திக்கு முன்னால் வன்புணர்வு செய்த நபரை கண்டுபிடிக்க அத்தனகல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமியை பலாத்காரம் செய்ய ஊக்குவித்த சித்தியை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தனகல்ல ஹல்பன்தெனிய பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வரும் 11 வயது சிறுமியை சந்தேகநபரான தந்தை 2 வருடங்களாக கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சிறுமி தனது 9 வயது முதல் தந்தையினால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டு மகள்களைக் கொண்ட குடும்பத்தின் இளைய மகளுக்கு தற்போது 9 வயதும், வன்புணர்வுக்கு உள்ளான மூத்த மகளுக்கு 11 வயதும் ஆகிறது.

மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தில் வசித்த வேளையில், சந்தேகநபரான தந்தை தனது சட்டபூர்வ மனைவியை வீட்டை விட்டு விரட்டி விட்டு, பின்னர் மறுமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளுடன் அத்தனகல்ல பிரதேசத்திற்கு வந்து வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபர் 9 வயதான இளைய மகளை அறைக்கு வெளியே இழுத்து வந்து வெளியே விட்டுள்ளார். மூத்த மகளை படுக்கையில் படுக்கவைத்து, அவரது கைகால்களை துணியால் கட்டி, வன்புணர்வு செய்துள்ளார். இதன்போது, தந்தையின் இரண்டாவது மனைவியும் கட்டிலில் பக்கத்தில் உட்கார்ந்திருந்து, வல்லுறவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில் சிறுமியை கட்டிலில் கட்டுவதற்கு தேவையான துணியை சித்தி கொடுத்தார் என்பதும், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர், இரத்தக்கறை படிந்திருந்த சிறுமியின் உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை துவைத்திருப்பதும் தெரியவந்தது.

சந்தேக நபரின் தந்தை திருமணத்திற்கு முன்னர் இராணுவத்தில் கடமையாற்றியவர் எனவும், அவரிடம் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவரிடம் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் இருப்பதாகவும், சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால், சுட்டுக் கொன்று விடுவதாக  மகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி தற்போது வத்துபிட்டிவல அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சத்திரசிகிச்சைக்காக ராகம பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி பாடசாலையின் வகுப்பு ஆசிரியரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியதையடுத்து பாடசாலை அதிபர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர், அத்தனகல்ல பொலிஸாரின் குழுவொன்று கடந்த ஜூலை 31ஆம் திகதி சிறுமியின் வீட்டை சுற்றிவளைத்து சிறுமியின் சித்தியை கைது செய்தனர். சந்தேக நபரான தந்தை வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்