சங்கமித்தை வரவும் இல்லை அரசமரம் நடவும் இல்லை என்றும் பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராகவும் தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே போராட்டம் இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கயேந்திரன் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகெண்டனர்.





