அமெரிக்காவில் இலவசத்துக்காக முண்டியடித்த கூட்டம்

Date:

அமெரிக்காவின், நியூயோர்க் நகரிலுள்ள மன்ஹாட்டனின் யூனியன் சதுக்கத்தில் பெரிய பரிசை இலவசமாக வழங்கப்போவதாக வெளியான அறிவித்தலையடுத்து, அங்கு  ஆயிரக்கணக்கான இளையவர்கள் அலைமோதினர்.

Twitch, YouTube ஆகிய தளங்களில் காணொளிகளும் நேரடி ஒளிபரப்புகளும் செய்யும் காய் செனட் (Kai Cenat) நியூயோர்க் நகரில் பெரிய பரிசு ஒன்றை வழங்கப்போவதாகத் தமது Instagram பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அவர் இலவசமாக PlayStation 5 கருவிகளை வழங்கவிருந்ததாகக் கூறப்படுகிறது. லைவ்ஸ்ட்ரீமிங்கிற்கான கணினி அல்லது புதிய பிளேஸ்டேஷன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்ததாக பெரும்பாலான இளைஞர்கள் கூறினர்.

 

மாலை 4 மணிக்கு நிகழ்வு நடப்பதாப செனட் அறிவித்தார். ஆனால் மதியம் 1.30 மணிக்கே அங்கு கூட்டம் சேர்ந்து, வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டனர். பெரும் கூட்டம் கூடி, அங்கு நிற்பதற்கு இடமில்லாமல், அரகிலிருந்த கடைகள், வாகனங்களின் மீதும் இளைஞர்கள் ஏறி நின்றனர்.

நேரம் ஆக ஆக குழப்பம் ஏற்பட்டது. இளைஞர்கள் போத்தல்கள், கற்களை வீசத் தொடங்கினர். நிலைமையை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான பொலிசார் அனுப்பப்பட்டனர்.

பெரும் களேபரத்தின் மத்தியில் பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்தினர். 30 சிறுவர்கள் உள்ளிட்ட 65 பேரை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஏற்றப்பட்ட பேருந்தும் தாக்கப்பட்டது.

செனட் வந்திருந்த காரையும் மக்கள் விட்டுவைக்கவில்லை. சம்பவ இடத்திலிருந்து கார் கிளம்பியபோது காரிலிருந்து ஒருவர் விழுந்தார்.

செனாட் மீது, கலவரத்தைத் தூண்டுதல், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் மற்றும் பிற குற்றங்கள் எனப் பல பிரிவுகளில் குற்றம் சாட்ட காவல்துறை திட்டமிட்டுள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர்.

குறைந்தது மூன்று அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்தனர். ஒரு சார்ஜென்ட் கை உடைந்தது. குறைந்த பட்சம் நான்கு பொதுமக்கள் ஆம்புலன்ஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர், மேலும் பலர் இரத்தம் தோய்ந்த தலைகள் மற்றும் பிற காயங்களுடன் அந்தப் பகுதியை விட்டு வெளியேறினர். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களின் நிலைமைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

21 வயதான செனட், ட்விட்ச் தளத்தில் 6.5 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு வீடியோ கிரியேட்டர் ஆவார். அங்கு அவர் தொடர்ந்து லைவ்ஸ்ட்ரீம் செய்கிறார். அவர் YouTube இல் 4 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார், அங்கு அவர் தினசரி வாழ்க்கை மற்றும் நகைச்சுவை வீடியோக்களை வெளியிடுகிறார்.

அவரது 299 YouTube வீடியோக்கள் 276 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன. டிசம்பரில், 12வது வருடாந்திர ஸ்ட்ரீமி விருதுகளில் அவர் ஆண்டின் சிறந்த ஸ்ட்ரீமராக தெரிவானார்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்