உலக சந்தையில் காஸ் விலை அதிகரித்துள்ள போதிலும் ஓகஸ்ட் மாதத்தில் லாஃப் எரிவாயு விலை உயர்த்தப்படாது என்றும் கடந்த ஜூலை மாத விலைக்கே விற்பனை செய்யப்படும் என்றும் லாஃப் எரிவாயு நிறுவனத்தின் குழும முதன்மை செயல் அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் இன்று (4) தெரிவித்தார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 1,476 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.




