தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சிரஞ்சீவி, விஜய், அஜித், வெங்கடேஷ், மோகன்லால், மம்மூட்டி ஆகியோரின் சம்பளம் பல கோடிகளில் இருக்கின்றன. ஆனால், இவர்கள் எல்லோரையும் விட சொத்து மதிப்பில் டாப்பில் இருக்கிறார் நாகார்ஜுனா. அவரின் சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி என்கிறார்கள்.
ஒரு படத்துக்கு ரூ.9 கோடியில் இருந்து ரூ.20 கோடி சம்பளம் வாங்கும் அவர் விளம்பரங்களுக்கு ரூ.2 கோடி வாங்குகிறார். இருந்தாலும் அவர் தந்தையும், நடிகருமான நாகேஷ்வர ராவ் தொடங்கிய அன்னப்பூர்ணா பிலிம் ஸ்டூடியோவின் பங்குதாரர், மீடியா ஸ்கூல், கன்வென்ஷன் சென்டர் என பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதன் மூலம் அவருக்கு இவ்வளவு சொத்து மதிப்பு உள்ளது.
அவருக்கு அடுத்த இடத்தில் நடிகர் வெங்கடேஷ் இருக்கிறார். அவர் சொத்து மதிப்பு ரூ.2200 கோடி. ரூ.1650 கோடி சொத்து மதிப்புடன் சிரஞ்சீவி 3ம் இடத்திலும் அவர் மகன் ராம் சரண் ரூ.1370 கோடியுடன் 4ம் இடத்திலும் இருக்கின்றனர். ஜூனியர் என்.டி.ஆர் (ரூ.450 கோடி), விஜய் (ரூ.445 கோடி), ரஜினிகாந்த் (ரூ.430 கோடி), கமல்ஹாசன் (ரூ. 388 கோடி), மோகன்லால் (ரூ.376 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை வட இந்திய சேனலான ஜூம் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.