26.8 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா கொலை: திருமணத்துக்கு புறம்பான உறவு விவகாரம்தான் காரணமா?

வவுனியாவில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற ரெலோ இயக்க பிரமுகரும், சர்ச்சைக்குரிய வர்த்தகருமான சுரேஸ் என்பவரின் வீட்டிற்கு தீ வைத்து, தம்பதியை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நீதவான் வசீம் அஹமட் இந்த உத்தரவை இன்று வழங்கினார்.

ஜூலை 24ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற தாக்குதல், தீ வைப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் 31ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார், 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்களை இன்று மாலை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் தொற்று நோய்கள் பரவி வருவதால், சந்தேகநபர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வீடு தீக்கிரையாக்கப்பட்டதில் 21 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், தீக்காயங்களுக்கு உள்ளான அவரது 35 வயதுடைய கணவர் யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்கு வந்து, அத்தமீறி உள்நுழைந்து அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி வீட்டினுள் தீ வைத்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியினரின் 2 வயது ஆண் குழந்தை, 7 வயது மற்றும் 13 வயது பெண் பிள்ளைகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 4 பெண்கள் மற்றும் 42 வயதுடைய வர்த்தகரான ரெலோ உறுப்பினர் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முகமூடி அணிந்த குழுவொன்று வீட்டிற்கு தீ வைப்பதற்கும் குடியிருப்பாளர்களை தாக்குவதற்கும் வரும் காட்சிகளும் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதுடன், விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று (01) வவுனியா வைரவபுளியங்குளம் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களைக் கொல்லப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஐந்து வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 30 வயதுடைய வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

பிரதான சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருமணத்துக்கு புறம்பான உறவு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இன்று ஒரு தகவல் பரவியது. என்றாலும், சில வட்டாரங்கள் வேறு ஒரு தகவலை தெரிவித்தன. “சர்ச்சைக்குரிய“ வர்த்தக கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம், தாக்குதல்தாரிகளின் இலக்கு சுகந்தனா அல்லது அவர் தற்செயலாக சிக்கி உயிரிழந்தாரா என்பது தெரியவில்லையென குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும், கொல்லப்பட்ட சுகந்தனுக்கு, இன்று வெளியான திருமணத்துக்கு புறம்பான உறவு விவகாரமும் இருந்தது உண்மையே.

வவுனியா பகுதியிலுள்ள பெண் கிராம சேவகர் ஒருவர் விவாகரத்தின் பின்னர் சுகந்தனுடன் லிவிங்டுகெதர் வாழ்க்கை நடத்தினார்.

சுகந்தன் மிரட்டி பணம் பறிப்பது, வட்டி, வன்முறை தாக்குதல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவர் உள்ளிட்ட ஒரு குழு, ஒருவரை தாக்கும் வீடியோ அண்மையில் வெளியாகியிருந்தது. அந்த வீடியோ எடுக்கப்பட்ட காலப்பகுதியில், ஒருவரை தாக்கி குற்றுயிராக குளக்கரையில் வீசிவிட்டு சென்ற சம்பவத்தில் சுகந்தனும், மற்றொருவரும் கைதாகி விளக்கமறியலில் இருந்தனர்.

இந்த காலப்பகுதியில் சுகந்தனுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த பெண் கிராம சேவகர், சுகந்தனின் நண்பன் ஒருவருடன் நெருக்கமாகி, அவருடன் வாழச் சென்று விட்டார்.

விளக்கமறியலில் இருந்து வந்த சுகந்தன், நண்பருடன் முரண்பட்டார். பின்னர், அந்த பெண் கிராம சேவகர் தொடர்பில் அவதூறு பரப்பி சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு வவுனியா நகரில் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை சுகந்தனே செய்ததாக கிராம சேகவர் பொலிசில் முறையிட்டிருந்தார். இந்த விவகாரத்திற்கு போதிய ஆதாரமில்லாததால் யாரும் கைதாகவில்லை.

இந்த சம்பவங்கள் நடந்து ஓரிரு வருடங்கள் கடந்த நிலையில், கொலைக்கு இதுவே காரணம் என சில தரப்புக்கள் குறிப்பிட்டு வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றிய பிரதி அமைச்சர் மீது குற்றச் சாட்டு

east tamil

கிளிநொச்சியில் 25 கிலோ கஞ்சா மீட்பு!

east tamil

பெண் எம்.பியின் முறைப்பாட்டால் ஒருவர் கைது!

Pagetamil

ஐ.தே.கவின் பொதுச்செயலாளரானார் தலதா!

Pagetamil

Leave a Comment