போலியான வேலைகளில் நேரத்தை வீணடிக்கத் தயாரில்லை என்பதால் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு ஜனாதிபதி நாளை (26) அழைப்பு விடுத்துள்ள நிலையில், விஜித ஹேரத் தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
முன்னதாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அது நடக்கவில்லை எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார். எனவே, இந்த மாநாட்டிலும் அதுதான் நடக்கும் என்றார்.
இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி தேர்தல் வாக்குகளை இலக்கு வைத்து இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, போலியான வேலைகளுக்கு நேரத்தையும் பணத்தையும் செலவிட தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றார்.