பாடசாலைகளில் 2ஆம் தவணை இன்று ஆரம்பம்

Date:

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் இன்று (24) ஆரம்பிக்கிறது.

2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஓகஸ்ட் 17 ஆம் திகதி வரை தொடரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மட்டுமே பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

இரண்டாம் பாடசாலை தவணை ஓகஸ்ட் 28ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நடைபெறும்.

மூன்றாவது பாடசாலை தவணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்காக 2024 ஜனவரி 1ஆம் திகதி மீண்டும் பா்சாலைகள் திறக்கப்படும்.

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை 2024 பெப்ரவரி 16 ஆம் திகதி வரை தொடரும்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்