இன்று காலை திட்டமிடப்பட்ட பல புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இயந்திர சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று காலைக்கான குறைந்தது 11 நேர புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக நேற்றைய தினம் பல புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.




