யாழில் பேருந்து- கார் மோதி விபத்து!

Date:

யாழ்ப்பாணம், பலாலி வீதியில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலாலி வீதி, கோண்டாவில் சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்துசபை பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளாகின.

இ.போ.ச கோண்டாவில் சாலையிலிருந்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பதுளைக்கு சேவையில் ஈடுபடவிருந்த பேருந்தும், இருபாலை பக்கமிருந்து கோண்டாவில் சந்திக்கு வந்த வைத்தியர் ஒருவரின் காரும் மோதின.

பேருந்தால் மோதப்பட்ட கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரின் கால் முறிந்தது. காரை செலுத்தி வந்தவரும் காயமடைந்தார். இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு: லண்டன் கூட்டாளிக்கு பிடிவிறாந்து!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம்...

நிந்தவூரில் சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு கடும் நடவடிக்கை: இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்

நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்