சிறுமியை ஒரு வருடமாக வல்லுறவுக்குள்ளாக்கிய பாதிரியாருக்கு வலைவீச்சு!

Date:

சுமார் ஒரு வருட காலமாக பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை அவ்வப்போது பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமை பாதிரியார் ஒருவரை கைது செய்ய மாரவில தலைமையக பொலிஸார் பல விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். .

கைது செய்யத் தேடப்படும் சந்தேகத்திற்குரிய அருட்தந்தை தலைமறைவாக உள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்ய தேடப்பட்டு வரும் இந்த அருட்தந்தை நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிக்கை மாரவில நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அருட்தந்தை நாட்டை விட்டு தப்பிச் சென்றால் அவரை கைது செய்யுமாறு உத்தரவும் பெறப்பட்டுள்ளதாகவும் உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் இந்த மாணவியின் பெற்றோருக்கு இது தெரியவந்ததையடுத்து, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மாரவில தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்